பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவை 4 ஆவது தடவையாக நீடிப்பு : அரசியலமைப்பு பேரவை நிராகரிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு  ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நான்காவது சேவை காலநீடிப்பை அரசியலமைப்பு பேரவை  நிராகரித்துள்ளது. இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன 2020ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவை ஊடாக தீர்மானம் எடுப்பது இழுபறி நிலை காணப்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரின்…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 32.5 மில்லியன் டொலர் நிதியுதவியளிக்கும் அமெரிக்கா

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்காக 32.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பசியைக் குறைத்து கல்வியறிவு மற்றும் ஆரம்பக்கல்வியை மேம்படுத்தும் ஒரு உணவு உதவி முன்முயற்சியான கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கிற்கான சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத்திணைக்களம் புதிததாக ஒரு 32.5 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதை அறிவிப்பத்தில் மகிழ்ச்சியடைவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பாடசாலை உணவுகள், ஆசிரியர்களுக்கான…

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – மாலைதீவின் புதியஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் இலங்கை – மாலைத்தீவு ஜனாதிபதிகள் சந்தித்ததுடன் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்…

Read More

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில்நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார். வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய…

Read More

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறு வௌியீட்டில் மாற்றம்

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்பிலான சிங்கள, தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் கூறுகிறது. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை,…

Read More

சர்வதேச விசாரணையே தேவை – நிதி தேவையில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு…

Read More

அஸ்வெசும நன்மை  மும்மடங்காக அதிகரிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

ஐ சி சி தடையை நீக்குதல் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை இழத்தல் குறித்து கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர்கள் உப குழுவுக்கு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தற்போது விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும் , கிரிக்கெட் தொடர்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவுக்கு அதிகாரம்வழங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்களன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தார். மேலும், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிப்பதாயின், அதற்கு அமைச்சரவையின் அனுமதி…

Read More

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமானால், கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர  விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக்…

Read More

2024 ஆம் ஆண்டை பலமான பொருளாதார ஆண்டாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அதேபோல், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற…

Read More