உள்ளூர்
மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது தமிழ்தேசிய கொடி தினம் – பிரம்டன் மேயர்
தமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21…
உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி
உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மாதம்பையில் பஸ் மோதி மூவர் காயம்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் ஹலாவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சிறுமி பாடசாலை முடிவடைந்து தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின்சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியத்துவமுடையதாகும். குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உள்நாட்டில் மாத்திரமின்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவற்றை மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். காணொளியூடாக விசேட அறிவித்தலொன்றை விடுத்து இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : நாட்டை வங்குரோத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தீர்க்கமானதாகும். நாட்டுக்காக…
பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
பிக்கு ஒருவரின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்…
நாட்டில் ஒரே நாளில் நடைமுறைக்கு வந்த 4 சட்டங்கள்
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார். அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 28 ஆம்…
பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட் விற்கப்பட்டது
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகமத்தின் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின்…
6 வாரங்களுக்கு களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்திற்கு பூட்டு
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் எரிவாயு மற்றும் நீராவி விசையாழி நேற்று (17) முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 6 வார பராமரிப்புக்காக ஆலை மூடப்படும். களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 165 மெகாவாட் திறன் கொண்டது மற்றும் நப்தா எரிபொருளில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய சுகாதார செயலாளராக பாலித மஹிபால நியமனம் ?
புதிய சுகாதார செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) வைத்தியர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ நிபுணரான வைத்தியர் மஹிபால 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக நியமனம் பெறுவதற்கு முன்பு சுகாதார செயலாளராகவும் பிரதி பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். இவர் பொது சுகாதாரம், சுகாதார துறை முகாமைத்துவம், வணிக நிர்வாகம் மற்றும் பொருளாதார…
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிமன்று மறுப்பு
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை மன்று தள்ளுபடி செய்தது.

