உள்ளூர்
IMF இரண்டாவது கடன் தவணைக்கு அனுமதி
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார்…
P.T.A.வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து…
கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு
நாளை சனிக்கிழமை (09) மாலை 5.00 மணி முதல் அடுத்த 16 மணிநேரம் வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும். கொழும்பு – 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். இந்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் வரியை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:- ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர். 80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை…
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர். இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்-
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியானது
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளது.
எமக்கு நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும்!
குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட…
புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செபஸ்தியார் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதி ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில்,…
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; அடையாள அணிவகுப்பு இன்று
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில்,…
வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்தபோது சித்திரவதைக்குள்ளாகி மரணம் : மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸார் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் கடமையில் இருந்தார்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில் பொலிஸ் நிலையத்தில் தனக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து கூறியிருந்தார். இந்த காணொளியை பார்வையிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை…

