உள்ளூர்
வட மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக முறைப்பாடளிக்க தொலைபேசி சேவை – வைத்தியர் த.சத்தியமூர்த்தி
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்தார். 0761799901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டும் வட்ஸ் அப் மூலமாகவும் முறையிட முடியும். முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு…
யாழ். கோப்பாயில் தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் நிரோசன் (வயது 29) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில்…
முல்லைத்தீவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! : வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கின! 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர்நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன….
இலங்கையில் தாமதமின்றி தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர்
இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர்களான பென் கார்டின், ஜிம் ரிச், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து இலங்கையில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் நீதியை அடைதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட இருகட்சித் தீர்மானமொன்றை செனெட் சபையில் முன்மொழிந்துள்ளனர்….
தமிழர்கள் வலியுறுத்திய அடிப்படை உரிமைகள் இமயமலை பிரகடனத்தில் உள்ளடங்கவில்லை – அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு விசனம்
உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள ‘இமயமலை பிரகடனத்தில்’ தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு, அதனை வெளியிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின்…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை (14) அழைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து…
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண…
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாரால் அழைக்கப்பட்டு மீண்டும் விசாரணை
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் புத்தர் சிலையும் வைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருந்ததுடன், ஆதிசிவன் ஆலய விக்கிரகங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தொல்பொருட்களை சேதப்படுத்தாது வழிபாடு செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி…
இலங்கை அரசாங்கம் வடக்குகிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் – அமெரிக்க செனெட் உறுப்பினர்கள்
இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான பாதுகாப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டும்,வடக்குகிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை சமாதான காலத்திற்கு ஏற்ற வகையில் குறைக்கவேண்டும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளியிடும் தீர்மானமொன்றை அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர். இலங்கை மக்களிற்கும் ஊழலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான…
ஈழத்தமிழர்களிற்கும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கும் ஆதரவு – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ்
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். இனப்படுகொலைக்கு உரையாற்றியுள்ள அவர் அமெரிக்க காங்கிரசில் உள்ள தனது சகாக்கள் தமிழ் மக்களிற்கு எதிராக் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு தீர்வை காணமுயலவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிராந்தியத்தில் சுயநிர்ணயஉரிமையை அடிப்படையாக கொண்ட தீர்விற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நான் தமிழ் மக்களிற்கு ஆதரவாகயிருப்பேன்…

