சிறையிலுள்ள தமி்ழ் அரசியல் கைதிகளின் விடுதலை : ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை !

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல்…

Read More

மியன்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்க கூட்டிணைந்த முயற்சி : 56 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

அண்மையில் மியான்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மியான்மார் அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகிவருவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை முன்னதாக மியன்மார் அரச அதிகாரிகளுடன் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, 2022 – 2023 க்கு இடைப்பட்ட காலத்தில்…

Read More

பண்டிகைக் காலங்களில் தடையில்லா மின்சாரம்

எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். பராமரிப்பு பணிகளுக்காக மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக சர்வதேச வழிகாட்டுதலின்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வார…

Read More

ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டு செல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும்…

Read More

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல்!

மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு   தீவிரமாக செயற்பட்டு வருவதாக  வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.   இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு  நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ்  மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…

Read More

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம மரணம் ; கைதான மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு   வியாழக்கிழமை (21)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். செய்தியின் பின்னணி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை …

Read More

புலம்பெயர்ந்தோர் என்பதால் மட்டும் இனவாதிகள் என்றோ இலங்கை எதிர்ப்பாளர்கள் என்றோ அர்த்தப்படாது – சாகல ரத்நாயக்க 

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.   புலம்பெயர்ந்தவர்களை இந்நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கொண்டு, அவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கான இடமாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டுமெனில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற தேசிய குடிபெயர்ந்தோர்…

Read More

காலநிலை முன் எச்சரிக்கைக்கான பிரிவு ஜனாதிபதி தலைமையில் அறிமுகம்

அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் SLT Mobitel, Hutch, Dialog, Airtel உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து முழுமையான அனர்த்த முன் எச்சரிக்கை பொறிமுறையொன்றை வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…

Read More

ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

Read More