உள்ளூர்
‘என்ன நேர்ந்தது’ என்று தேடிய ஆணைக்குழுக்கள்’ யார் அதனை செய்தது எனக் கண்டறியவில்லை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்
இலங்கையில் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் ‘என்ன நேர்ந்தது’ என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை ‘யார் அதனைச் செய்தது’ என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், எனவே தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து யஸ்மின்…
மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது – விஜயதாச ராஜபக்ஷ
நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர். தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து…
தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும் யுக்திய சுற்றிவளைப்பு
பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். எவ்வாறாயினும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, யுத்திய சுற்றிவளைப்பில் கடந்த 06 நாட்களில் 12,132 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8 கிலோவிற்கும்…
மியன்மாரில் இருந்து தப்பிய மூவர் சி.ஐ.டியில் வாக்குமூலம்
மியன்மாரில் உள்ள முகாம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பினால் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், முகாமில் இருந்து தப்பி நேற்று (24) இலங்கை திரும்பிய ஐவரில் மூவர் வர்த்தக, ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மியன்மாருக்கு தரவு செயற்பாட்டாளர்களாக சென்ற நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் அடங்கிய குழு, பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி…
JN 1 கொரோனா அறிகுறிகள் என்ன?
2020 ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை…
யாழில் கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர். கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். “தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை…
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1004 கைதிகள் விடுதலை
நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழேயே 989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார். இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயார் – மைத்திரிபால
கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்தடைந்தமைக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவான பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வாறிருகையில் அவர்களின் பின்னால் செல்வதா அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொறுத்தமான வேட்பாளரை சுதந்திர கட்சி…
யாழில் 20 இளைஞர்கள் புனர்வாழ்வுக்கு
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் கைதான 20 இளைஞர்களை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது , போதைப்பொருளை கடத்தியமை, உடமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 100கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும்…

