உள்ளூர்
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸாரின் செயற்பாடு திருப்தி இல்லை – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. சூம் காணொளி ஊடாக புதன்கிழமை (03) நடைபெற்ற…
திருமலை 5 மாணவர் படுகொலை விவகாரம் : 18 வருடங்கள் கடந்தும் நீதி நிலைநாட்டப்படவில்லை : சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்
திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை…
வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது : திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள்
இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருட்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு செயற்படவேண்டாம் என்று வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். இவ்வாண்டு முதல் அமுலுக்குவரும் பெறுமதிசேர் வரி…
இலங்கை வரும் ஜப்பானிய நிதியமைச்சர்
ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜப்பானிய நிதியமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்!
தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் செவ்வாய்க்கிழமை (26) போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு – அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு
யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான…
மன்னார் – யாழ். பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது. குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
கொழும்பில் இருந்து புறப்பட்ட சுனாமி ரயில்!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை புகையிரதம் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. காலை 6.25 மணிக்கு மருதானை நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதம் 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய…
இலங்கையில் கொவிட் 19 – ஜே.என்.-1 பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம்
உலகின் பல நாடுகளிலும் கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இதன் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக பிரதான வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் எந்த மாதிரியிலும் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே ஜே.என்.-1 பிறழ்வினால் ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வாறிருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார…
இலங்கை – நேபாளத்துக்கு இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்ட அமர்வின் ஓரங்கமாக இருநாடுகளுக்கும் இடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டள்ளது. வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் காத்மண்டுவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத்துடன்…

