உள்ளூர்
பிரபல மருந்தகத்தின் ஊழியர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மருந்தகத்தில் நேற்று (07) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் 1,100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட…
புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை
புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை (09) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 என்ற வர்த்தமானி பத்திரத்திற்கான உத்தரவுகள் விவாதத்திற்கு…
வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு இரு மாதங்களில் தீர்வு : ஜனாதிபதி
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில்…
அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இவருக்கு தேவையான ஏற்பாடுகளை…
திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி : கிழக்கில் பிரசாரத்தினை ஆரம்பித்தார் சிறீதரன்
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைமை வேட்பாளர்களின் ஒருவரான சிவஞானம் சிறீதரன் நேற்று முதல் மட்டக்களப்பில் பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதோடு, வருடாந்த மாநாடு…
முறைகேடான பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பவேண்டும் – சாலிய பீரிஸ்
சில பொலிஸ் அதிகாரிகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அவமானங்கள் குறித்து வெளிப்படுத்துவதற்கான தைரியம் பாதிக்கப்பட்ட பலருக்கு இருப்பதில்லை. ஆனால் பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நாம் குரலெழுப்பாவிடின், முறைகேடான சில பொலிஸ் அதிகாரிகளின் மோசமான நடத்தையினால் வெகுவிரைவில் நாட்டுமக்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக உணருவார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார். பொலிஸாரின் அண்மையகால நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அவர், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: அண்மையில் கொழும்பு…
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு – விபரம் இதோ !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார். இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான…
தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் விசேட அறிவித்தல்
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, “கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, கல்முனை ஆகிய 09 பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு…
ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். பின்னர் மாலை 7.00 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றார். 5ஆம் திகதி காலையில் வவுனியா…
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் அலெக்ஸ் மரணம் – நீதிமன்றத்தின் உத்தரவு
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது….

