உள்ளூர்
முல்லைத்தீவை சேர்ந்த 17 பேர் மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான…
கிளிநொச்சியில் கடந்த போகத்தில் 59103 மெற்றிக் தொன் நெல் அறுவடை
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் 59 ஆயிரத்து 103 மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர் பாசன குளங்களின் கீழும் மானாவாரி பயிர் செய்கை நிலங்களின் கீழும் இம்முறை மொத்தமாக 26 ஆறாயிர்த்து 582 கெக்ரேயர் நிலப்பரப்பில் காலப்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள்…
மீண்டும் இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் ஆணைக்குழு இன்று முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இச்சந்திப்பின் போதுஇ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதி இதுவரை நிதியமைச்சினால் விடுவிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கோரி மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு பிணை
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்கின் பிரதிவாதியான பாத்திமா ஹாதியாவும், பிணைதாரர்களும் வௌிநாடு செல்ல தடை விதித்து…
இலங்கையில் தமிழர்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை…
இலங்கையில் ரஷ்யர்களின் வருகை அதிகரிப்பு
மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து…
தொழிற்சங்க நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக 15 ஆம் திகதி ரயில்வே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் பிற்போடப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரயில்கள் மூலம் முன்பதிவுகளை மேற்கொண்டு ஆசனங்களை ஒதுக்கி ரயில் நிலையங்களுக்கு வருகை தந்திருந்தசுற்றுலாப் பயணிகள் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இதனிடையே, நுவரெலியாவிற்கு பஸ்கள் மூலம் வருகை தந்திருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் சிலர் நாணு ஓயாவிற்கு சென்றுள்ளதோடு…
சினிமா வாழ்க்கையை பணயம் வைக்கும் சாய் பல்லவி
கிளாமர் இல்லாமல் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு மட்டுமின்றி இவருடைய நடனத்திற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கடந்த வருடன் இவர் நடிப்பில் கார்கி படம் தமிழில் வெளிவந்தது. மேலும் தெலுங்கு விரடா பருவம் படத்தில் நடித்திருந்தார். இதில் கார்கி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த படம் இந்நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி நடக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி…
IMF கடன் வசதியைப் பெற ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கு நன்றி -ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம், ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன்…
தொழிற்சங்க போராட்டம் – மக்கள் அவதி
பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையில் நேற்று 14 ஆம் திகதி இரவு புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்திற்கான இரண்டு இரவு நேர புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனை அடுத்து புகையிரதத்தில் பயணிப்பதற்காக ஹட்டன்…

