உள்ளூர்
இலங்கையில் 40 அரச நிறுவனங்களை மூட திட்டம்
இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு வீட்டை எரித்த கணவன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது. மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது…
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
எல்பிட்டிய பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன்,…
அரசியல் கைதி விடுதலை
2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செல்லையா சதீஸ்குமார் இன்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 15 வருடகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. செல்லையா சதீஸ்குமார் உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதியினால்…
இலங்கைக்கான இந்திய உதவிகள் இயல்பானது – ஜெய்சங்கர்
இலங்கை நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது இந்தியா அதற்கு உதவுவது இயல்பான விடயம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் என தெரிவித்துள்ளார். ’’Blood is thicker than water’என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாகயிருப்பதற்கு என்ன செய்யலாம் என இந்தியா சிந்திப்பது இயல்பான விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையின் பின்னர் அயல்நாடுகள் நெருக்கடியில் உள்ள போது இந்தியா அதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது என…
தேயிலை தொழிற்சாலை எரிந்து நாசம்
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு…
ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – ரணில் இரகசிய திட்டம்
உத்தேச உள்ளுராட்சி மன்ற தேர்தலை மேலும் ஒருவருட காலத்திற்கு ஒத்திவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஜனாதிபதி தேர்தலை 2024 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான தீர்மானத்தை அரச உயர் மட்டம் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான கால எல்லைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு கிடைக்கப்பெறுகின்றது. அதன் பிரகாரம்…
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து முட்டை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது. குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ…
திட்டமிட்ட இனவழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் – பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு
இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பின் சார்பில் உரையாற்றிய நிஷாந்தி பீரிஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது: தமிழீழ மக்கள் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருவருடகாலமாக வடமாகாணத்தின் தனியொரு மாவட்டத்தில் 20 இற்கும்…
ஶ்ரீ ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

