உள்ளூர்
2024 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் திட்டம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது. உள்ளூராட்சி மன்றங்கள்…
தாய் பால் கொடுக்க மறுத்ததால் யாழில்உயிரிழந்த குழந்தை
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இலங்கைக்கு 36 000 மெட்ரிக் தொன் உரத்தை வழங்கிய அமெரிக்கா
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவில் வழங்கப்பட்ட 36 000 மெட்ரிக் தொன் உரத்தை சிறுபோகத்திற்காக ஐ.நா. உணவு , விவசாய ஸ்தாபனம் விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது. ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களுக்கிடையிலான சிறுபோகத்திற்கும் , அதற்கு அடுத்து வரும் பயிர்செய்கைப் போகங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிக நெல் விவசாயிகளுக்கு இந்த உரம் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கு தேவையான அளவின் அடிப்படையில் உரம் வழங்கப்படும்….
பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்துங்கள் – ஜனாதிபதிக்குச் சிறீதரன் எம்.பி. கடிதம்
யாழ்., நெடுந்தீவு – வெடியரசன் ஆலயம் பௌத்தமயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் இடங்களில் பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை,…
நாட்டு மக்களை மரணப்படுக்கைக்கு எடுத்துச்செல்லும் அரசு
சஜித் சாடல்
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்திருக்கும் ஒப்பந்தம் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை வாழச்செவதற்கு பதிலாக மக்களை மரணப்படுக்கைக்கு எடுத்துச்செல்லும் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தபோது மக்களை வாழச்செய்யும் எந்த நிவாரணமும் துண்டிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவர் அங்குதொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாட்டை இயக்குவதற்கான அனைத்து எஞ்ஜின்களும் இயங்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம்…
கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் மண்சரிவு : 64 குடும்பங்கள் பாதிப்பு
பண்டாரவளைப்பகுதியின் கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் ஏற்பட்ட மண்மேடு சரிவில் 7 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியிருப்பதோடு, 64 குடும்பங்களைச்சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுக்கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்படி பெருந்தோட்டப்பிரிவின் இலக்கம் 3 தமிழ் வித்தியாலய கட்டிடத்தொகுதியிலேயே, பாதிக்கப்பட்ட 212 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) இரவு ஏற்பட்ட மேற்படி அனர்த்தத்தினால் பலத்த காயங்களுக்குள்ளான 7 பேரில் நால்வர் கொஸ்லந்தை அரசினர் வைத்தியசாலையிலும், மூவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் இரு…
பெண்களே கோட்டாபயவை விரட்டினர்
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஶ்ரீலங்கா…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு இருக்காது என…
இலங்கையில் நிலநடுக்கம்
இலங்கையில் கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
மஹிந்தவின் ஆட்சியே இலங்கையின் தோல்விக்கு காரணம் – சந்திரிக்கா
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பித்த ஊழல் , மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடப்பட்டமையின் காரணமாகவே இன்று இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவது கடினம் என்ற போதிலும் , எம்மால் அதனை செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , நான் நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்தேன். கொள்ளையர்களுடன் அரசியலில் ஈடுபட முடியாது என்பதால் 2005ஆம் ஆண்டிலிருந்தே நான் விலகியிருந்தேன். 2015இல்…

