சஜித்தின் 14 கேள்விகள்

லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரச பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவால் முன்மொழியப்பட்டுள்ளதோடு, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி பின்வரும் விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன். 1. வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தில் 49.50%…

Read More

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் 10 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை 151,800 ரூபாவகவும், 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 165,000 ரூபாவகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம்…

Read More

10 ஆண்டு திட்டத்திற்கு ஒருதாய் பிள்ளைகள் போல் ஒத்துழையுங்கள்: ஜனாதிபதி ரணில்

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகல கடன்களையும் மீள செலுத்தி கடன் பெறாத நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,   நாமனைவரும் ஒரு தாய் மக்களாக செயற்பட்டால் இலங்கையை உலகின் பொருளாதார மையமாக மாற்ற முடியும்  என்றும்  தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை சற்று முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பின்னர் சபையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மனுத்தாக்கல்

உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பான நிதியை முடக்குவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நிறைவேற்ற நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Read More

இலங்கை வங்குரோத்தான நாடு அல்ல:ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) விடுத்துள்ள…

Read More

2 நாட்களில் இலங்கைக்கு நிதி – IMF உறுதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர். இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி…

Read More

விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தென்னாபிரிக அரசாங்கத்திடமிருந்து அனுபவப்பகிர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்காரணியை இலக்காகக் கொண்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென்ஆபிரிக்கா செல்லவுள்ளது. இலங்கைக்கான தென் ஆபிரிக உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்சல்க்…

Read More

சர்வதேச நாணயநிதியத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பு – அமெரிக்கா

இலங்கைக்கான நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மிகப்பெரும் செய்தி பொருளாதார மீட்சி நோக்கிய பயணத்தில் முக்கியமான நடவடிக்கை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்,சர்வதேச நாணயநிதியத்தின் திட்டமும் பொருளாதாரமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சி மற்றும் வெளிப்படை தன்மை போன்ற விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான கட்டமைப்பு  மாற்றங்கள் நிரந்தர…

Read More

இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கை தனது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயம் குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் என  சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கைகளின் நம்பகதன்மையை பேணுவதற்கு பலமுனை பணவீக்க உத்தி குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது உயா பணவீக்கத்திற்கு மந்தியில் கடும் மந்த நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள  அவர் குறைந்துபோயுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்பு நீடித்து நிலைக்க முடியாத…

Read More