உள்ளூர்
இன ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் நடைபயணம்
நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு கால் நடையாக நடை பயணம் ஒன்றை இன்றுஆரம்பித்துள்ளார். நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூர நோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும். நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும்…
பளையில் கஞ்சா விற்ற பொலிசார்
கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில்…
சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் – மைத்திரி
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று…
இலங்கைக்கு IMF கடன் கிடைத்தது – நிதியமைச்சு அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் ஒழிப்பு சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது
பால் மா விலை குறைப்பு
இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அடுத்த வாரம் முதல் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை…
சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை நிறைவேற்றலாம் – மைத்திரி
சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண…
யாழில் 10 படகுகள் தீக்கிரை
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை ….
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி
அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சாய எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய்யின் விலை திடீரென பெருமளவு குறைவடையவதன் ஊடாக, உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் பாரியளவில் நிவாரணம் கிடைக்கும் என அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறைவடையக்கூடும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இவ்வளவு…

