உள்ளூர்
13 ஐ கட்டுப்படுத்தும் 3 சட்டங்களை திருத்த நடவடிக்கை :ஜனாதிபதி
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை கட்டுப்படுத்தும் மூன்று சட்ட விதிகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு: கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது 13வது…
புகையிரதத்தை மறித்து போராட்டம்
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தினை மறித்து பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேர தாமத்தின் பின்னர் புகையிரம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ரயில் கடவையினை கடக்கும் வீதி பகுதியினை புகையிரத நிலைய ஊழியர்கள் அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிரதேச மக்கள் குறித்த வீதியில் பாரிய…
“தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பேசியது: “நீதித் துறைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு நாப்கின்…
8 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிசார்
அதிக இயந்திர திறன் கொண்ட 08 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல்மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸை பிரிவின் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்தனபிட்டிய பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு போலியானவை என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (25)…
மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி
கண்டி – பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரின்…
நாடு கட்டியெழுப்பப்பட்டதன் பின் ஜனாதிபதி தேர்தல்-ஹரின் பெர்னாண்டோ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும்.எனவே இன்னமும் தாமதமாகவில்லை , எதிர்தரப்பினரை எம்முடன் இணையுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த அவர் , சவாலை ஏற்றுக்…
கனடாவில் காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி…
கச்சதீவிலும் புத்தர் சிலை
கச்சதீவில் மர்மமான முறையில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மற்றும்…
இலங்கைக்கு 333 மில்லியனை முதல் கட்டமாக வழங்கிய IMF
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் முதலாம் கட்ட கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய 333 மில்லியன் டொலர்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஊடகப் பிரதானிகளுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த திங்களன்று அனுமதியளித்தது. அதற்கமையயே இக்…
10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு… காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை…

