உள்ளூர்
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும் – அரசாங்கம்
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்…
அமெரிக்கா,சீனா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் எரிபொருள் விற்க அனுமதி
இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையில் உள்ள எரிபொருள் சந்தையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு…
“Aukus” உடன்படிக்கை சீனா – குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது -ரணில்
பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கு இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட “Aukus” உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற நேர்காணலில் சூம் தொழில்நுட்பம் ஊடாக…
யாழில் விபத்து – இளைஞன் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ…
7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி
மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர சிகிச்சைகள் வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது….
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதி
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும்இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே…
ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்
வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது, வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.
இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை
இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை…
இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்
சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்கைக்கோள்களை இந்த மிஷனில் சுமந்து சென்றுள்ளடக்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், வணிக நோக்கில் செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம்…
ஆட்சியாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நம்ப முடியாது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான யானை காகம் மொட்டு ராஜபக்ச அரசாங்கம் தேர்தலை நடத்தாதிருப்பதற்கு பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை வழங்காமல், நீதிபதிகளை விமர்சனம் செய்தும், அவர்களை குறைமதிப்புச் செய்தும் மிரட்ட முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் பட்டினியால் வீதியில் இறங்கும் போது அரச மிருகத்தனத்தையும் பயங்கரவாதத்தையும் பிரயோகிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், இந்த ஏகாதிபத்தியத்தைப் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்க முடியாது எனவும், எனவே ஐக்கிய…

