உள்ளூர்
பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவரும் பலி
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர்…
சபாநாயகருக்கு சஜித் அனுப்பிய கடிதம்!
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர். இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது, இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என சிவில்…
இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை அதிகரிப்பு!
வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று (21) முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை…
ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டிருந்தார். அந்தப் பதிவில் “கம்பாலா நகரில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை…
சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் : இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகும்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின…
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும், கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டக்கிளைகளைகள் மற்றும், கொழும்புக்கிளை உள்ளிட்ட ஒன்பது மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள், மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் இந்த தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் வாக்கெடுப்பு இடம்பெறும் குறித்த நகரசபை மண்டபத்தின் வெளிப்புறமாக ஒவ்வொரு மாவட்டக்கிளை உறுப்பினர்களினதும், மத்தியகுழு உறுப்பினர்களதும் உறுப்புரிமை பரிசோதிசோதிக்கப்பட்டு, உறுப்புரிமை உறுதிப்படுத்தபின்னர் அவர்களுக்கான கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கெடுப்பு…
வடக்கில் சுகாதாரம், கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நிதி
முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (06) யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்….
நீர் வழங்கல் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சில தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவருடனான சந்திப்புகளில் பங்கேற்காமை, டெண்டர் மதிப்பீட்டுக் குழுக்களில் பங்கேற்காமை உள்ளிட்ட சில தொழிற்சங்க நடவடிக்கைள் கடந்த 05ஆம் திகதி காலை 8.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் தற்போது காலியாக உள்ள மேலதிக பொது முகாமையாளர் மேல், மேலதிக பொது முகாமையாளர் திட்டப்பணிகள் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் அவசரமாக ஆட்களை நியமிக்க வேண்டிய கட்டாயம்…
கட்டணம் செலுத்தாத 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும் ஏழை மக்களின் இணைப்புகள் என்பது தெரியவந்துள்ளது. மின்வெட்டு காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றை அவர்கள் இழந்துள்ளதாகவும், இதன்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில்…

