பாகிஸ்தானில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

பாகிஸ்தானின் நூர் மெகல்லாவில் அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் குளிர்சாதன பெட்டி வெடித்து இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான பரிதாப சம்பவம் பதிவாகியுள்ளது. சில மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் , குறித்த வீட்டிலிருந்த அனைவரும் தீயால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறியும் , தீக்காயங்களுக்கு உள்ளாகியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தடயவியல் நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே குளிர்சாதன பெட்டி…

Read More

இராணுவ பயிற்சி நடைபெறுவதால் சீனாவின் போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்ல தடை

சீனா சமீப காலமாக தாய்வான் கடற்பகுதியில் போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சி நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நேரடி இராணுவ பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது இன்று திங்கட்கிழமை முதல் 14 ஆம் திகதி வரை இருக்கும் எனவும், இதனால் பயிற்சி நடைபெறும் பகுதிகளில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு…

Read More

ஈரானில் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதலில் 2 பொலிஸார் பலி

ஈரானின் சிஸ்டான் மாகாணம் ஜாஹேடான் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். அத்தோடு 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் மசூதியை தாக்கிய இருவர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை…

Read More

அமெரிக்க நிதி அமைச்சர் வருகையை எதிர்த்து தாய்வான் எல்லையில் 13 விமானங்களை பறக்க விட்ட சீனா

தாய்வானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சீனா, வேறு எந்த நாடும் தாய்வானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. அடிக்கடி தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி தனது ஆதரவை உறுதி செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லன் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் போது 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி…

Read More

நெதர்லாந்து பிரதமர் திடீர் இராஜினாமா

நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் கூட்டணி கட்சிக்குள் நிலவிய குழப்ப நிலையால் நெதர்லாந்து பிரதமர் மார்க் இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை மார்க் ரூட் இராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

மெக்சிகோவில் பேரூந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ;27 பேர் பலி : 17 பேர் காயம்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியிலிருற்து நேற்று புதன்கிழமை அதிகாலை சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேரூந்து , ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பள்ளத்தில் விழுந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

கிரீஸ் அருகே கப்பல் கவிழ்ந்ததில் உயிரிழப்பு 79 ஆக உயர்வு

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. 104 பேரை் கிரீஸ் நாட்டின் கடற்படை, கடலோர காவல்படை மீட்டன. லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கடாபி ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே, அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. அங்கிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவது தொடர்கிறது. இவர்களை படகுகளில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதை…

Read More

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர்: இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில் புதன்கிழமை “ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்” என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலை மையகத்தில் பொருத்தமான மற்றும் முக்கியமான இடத்தில், ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் விதத்தில் அவர்களின் பெயர் பொதித்த நினைவுச் சுவரை எழுப்ப வேண்டும் என…

Read More

2024ம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும்: சீனாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு கப்பல்

சீனாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு பயண கப்பலானது பணிகள் முடிந்து கப்பல் கட்டும் இடத்தில் இருந்து வெளியேறியது. அடோரா மாஜிக் சிட்டி என்ற பெயரில் சீனாவில் மிக பெரிய பயண சொகுசு கப்பல் தயாரிக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கப்பல் மோர் டூ என்றும் அழைக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கட்டுமானம் நடைபெற்ற நிலையில் நேற்று ஷாங்காய் நகரில் கப்பல் கட்டும் இடத்தில் இருந்து சொகுசு கப்பலானது வெளியேறியது. கடைசி…

Read More

லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் தொடங்கியது

லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் ெதாடங்கிய நிலையில், பாஜகவின் ‘மிஷன் 2024’ வலைக்குள் ெதலுங்கு தேசம், சிரோமணி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பாஜகவுடனான கூட்டணி பேரங்களும் தொடங்கிவிட்டன. அதற்காக பல்வேறு காரணங்களால் காங்கிரசுடன் ஒத்து…

Read More