பாகிஸ்தான் ரயில் விபத்தில் 25 பேர் பலி

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்துக்குள்ளனது. இதில், ரெயிலில் பயணித்த 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,…

Read More

இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.  அத்தோடு, அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடைவிதித்துள்ளது. 

Read More

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: வாபஸ் பெறப்பட்டது ஊரடங்கு தளர்வு

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், “மத்தியப்…

Read More

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்…

Read More

தேர்தல் முடிவுகளை மாற்றியதாக ட்ரம்புக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தது.அமெரிக்காவை ஏமாற்றச் சதி செய்தல், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ், ஜனாதிபதி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்குத் திரு டிரம்ப் சதி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.அவர் மேலும் 6…

Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு

மியன்மாரின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில்‌ இராணுவ ஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01) தெரிவித்துள்ளன. அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14 வழக்குகளை அவர்‌ எதிர்கொள்வார்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுகள் 2021 ஆம்‌ ஆண்டு இராணுவப்‌ புரட்சியையடுத்து, ஆங்‌ சான்‌ சூகி உட்பட ஜனநாயக அரசியல்‌ தலைவர்கள்‌ பலரும்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஊழல்‌, சட்டவிரோதமாக தொடர்பாடல்‌ கருவிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப்‌…

Read More

தீயணைப்பு பணியில் ஈடுபட்ட விமானம் விபத்து : இரு விமானிகள் பலி

கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற அந்நாட்டு விமான படையை சேர்ந்த கனடைர் சி.எல்.-215 என்ற நீர் தெளிக்கும் விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதன் போது விபத்துக்கு உள்ளான குறித்த விமானத்திலிருந்த கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

விமான விபத்தில் அரசியல்வாதிகள் ஐவர் பலி.!

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து…

Read More

அவுஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து – பெண்ணொருவர் பலி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரொன்று , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னார் சென்ற பிரிதொரு காருடன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 6 வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளன. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More