மோதலுக்கு தயாராகும் அசர்பைஜான்-ஆர்மீனியா : ஐ.நா அவசரக் கூட்டம்
சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் (Nagorno-Karabakh) பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டிற்கும் அண்டை நாடான ஆா்மீனியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அசபைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம்…

