மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  மொரோக்கோவில் அந்நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.  அந்நாட்டின் தலைநகர்…

Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நாளை ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை நாளை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. பிரதீபன் இன்று விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார்.  இதனையடுத்து, மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.  தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். …

Read More

ஆதித்யா L-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம் PSLV C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, சரியாக ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்கு பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து ஆதித்யா விண்கலம் தனது தனித்த பயணத்தைத் தொடங்கியது.  இது குறித்து…

Read More

நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று முன் விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலையான நிலையில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்காக கடவுச்சீட்டைக் கோரி ஒன்லைன் மூலமாக ஜூன் 12 ஆம் திகதி விண்ணப்பித்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள…

Read More

நிலவின் தென் துருவத்திற்கு மனிதகுலத்தின் முதலடியை எடுத்துச்சென்று தனது பெயரின் அர்த்தத்தினை நிரூபித்தது விக்ரம்!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் ‘இந்தியா நிலவில் உள்ளது’ என்று அறிவித்திருக்கின்றார். நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து…

Read More

கேபிள் கார் விபத்து – குழந்தைகள் உட்பட 8 பேரும் பாதுகாப்பாக மீட்பு

பாகிஸ்தானில் கேபிள் கார் விபத்தில் சிக்கியிருந்த குழந்தைகள் உட்பட 8 பேரும் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம்…

Read More

பாகிஸ்தானில் சிறுவர்களுடன் அந்தரத்தில் தொங்கிய கேபிள் கார்

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம். அந்த…

Read More

நிலவில் மோதிய ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம்

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ஆம் திகதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ஆம் திகதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ஆம் திகதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17ஆம் திகதி வெற்றிகரமாக நிலவின்…

Read More

கனடா காட்டு தீ:கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம் -15000 குடும்பங்களை வெளியேற உத்தரவு

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் பல வீடுகளை காட்டுதீ விழுங்கியுள்ள நிலையில் சுமார் 15000 குடும்பங்களை அந்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 36000 பேர் கொண்டமேற்குகெலோவ்னா நகரில்  பல கட்டிடங்கள் தீப்பிடித்துள்ளன 2400 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முழுமாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது-மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்;ட காட்டுதீக்கள் காணப்படுகின்றன. இதேவேளையெலோநைவ்லிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட காலஎல்லை முடிவடைந்துள்ள நிலையில் அந்த நகரின் அனைத்து மக்களும் கார்கள் அல்லது விமானங்கள் மூலம் வெளியேறியுள்ளனர். நகரின் 20000…

Read More

7 பச்சிளம் குழந்தைகளை ஈவிரக்கம் இன்றி கொலை செய்த தாதி!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரிப்பு தொடர்பான முறைபாடின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போது அந்த வைத்தியசாலையில் லூசி லெட்பி என்ற…

Read More