மருத்துவமனையின் மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பலஸ்தீனிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன காஸா பிராந்தியத்தில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதாகவே இஸ்ரேல் அறிவித்தது. எனினும்…

Read More

முல்லைத்தீவு நீதிவானுக்கு உயிரச்சுறுத்தல் : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

குருந்தூர் மலை விவகாரத்தை விசாரணை செய்து வந்த முல்லைத்தீவு  மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டு இராஜினாமா செய்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.  ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விசாரணைக்கான உத்தரவு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா, அண்மை காலமாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்களுடன் மிக நெருக்கமான தொடர்புகள் வைத்திருந்ததாக புலனாய்வு பிரிவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிக்கை…

Read More

கடலுக்கடியில் மறைந்துள்ள 8 ஆவது கண்டம்: புதிய வரைபடத்தை வௌியிட்ட ஆய்வாளர்கள்

பசுபிக் பெருங்கடலில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. எனினும், ஒரு கண்டமே மறைந்திருப்பதாக புவியியலாளர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் அதன் வரைபடத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். 2017 ஆம் ஆண்டில், நியூசிலாந்தின் கரையோரத்தில் முன்னர் எப்போதும் அறியப்படாத ஒரு கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீலந்தியா அல்லது மாவோரி மொழியில் Te Riu-a-Māui என்று அதற்கு பெயரிடப்பட்டது. Zealandia அல்லது Te Riu-a-Maui என பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டத்தை பற்றி இன்னும் பல விடயங்களைத் தேடி ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. பூமியில்…

Read More

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் 57 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (29) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர். மசூதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலூசிஸ்தானில் மஸ்துங் (Mastung) மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதன்போது, மஸ்துங் மாவட்ட பொலிஸ் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார். மிலாதுன் நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. இந்த தாக்குதல்…

Read More

இந்திய பொருளாதார மண்டலத்தை அண்மித்துள்ள சீன ஆய்வுக் கப்பல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த தரவுகளுக்கு அமைய நேற்று முதல் குறித்த சீன கப்பல் இந்தியாவிற்கு சொந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், மிகக் குறைந்த வேகத்தில் பயணிக்கிறது. மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நேற்று காலை நுழைந்த Shi Yan 6 கப்பலை நிக்கோபார் தீவுகள் அருகே அவதானிக்க முடிந்தது.  இலங்கை…

Read More

மெக்சிகோ காட்சிப்படுத்தியது வேற்றுகிரகவாசிகளின் உடல்களா?

வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ் – aliens) கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அரசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  பத்திரிகையாளரும் UFO ஆர்வலருமான Jaime Maussan மற்றும் தடயவியல் நிபுணர் Jose Zalce Benitez ஆகியோரால் மெக்சிகோ காங்கிரஸில் 2 வேற்றுகிரகவாசிகளை ஒத்த உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அவை இரண்டிலும் மூன்று விரல்கள் இருந்ததுடன், தலைகள் நீளமாக காட்சியளித்தன.  இந்த சடலங்கள் குறைந்தது 1,000…

Read More

லிபியாவில் வௌ்ளத்தில் சிக்கி 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

லிபியாவில் புயல் தாக்கத்தை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என டெர்னா நகர மேயர் தெரிவித்துள்ளார்.  இதுவரை 6000 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.  இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த…

Read More

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியது

மொராக்கோவில் அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்-சாபி (Marrakesh-Safi) பிராந்தியத்தில் 6.8 மெக்னிட்யூட் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800-ஐ கடந்துள்ளது.   2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.  மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.  இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 நாட்களைக் கடந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 

Read More

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயலால் 2000 பேர் பலி; ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயல் காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.   வடகிழக்கு லிபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் Derna,  Misrata, Shahhat உள்ளிட்ட பல பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால், பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read More