அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று

இந்தியாவில்  உத்தரபிரதேஸ் மாநிலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறும் நிலையில் ராமஜென்ம பூமியில் காலை முதல்  பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் திகதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாள் பூஜையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.  விழாவின் சிகர நிகழ்ச்சியான, ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த…

Read More

ஈராக்கில் அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – பல அமெரிக்க படையினர் காயம்

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை…

Read More

15 பேரை சுட்டுக் கொன்ற மாணவன் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார். இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள்…

Read More

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 100 க்கும் மேற்பட்டோர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது. ​நேற்றிரவு  நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள்…

Read More

அல் ஷிஃபா மருத்துவமனைக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

காசா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை 1 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அல் ஷிஃபா மருத்துவமனையின் வைத்தியர்கள் 1 மணி நேரத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….

Read More

அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க கோரி ராஜீவ் கொலையில் விடுதலையானோர் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில்இருந்து கொட்டப்பட்டு இலங்கைஅகதிகள் முகாமில் தங்கியுள்ளேன். இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு…

Read More

ஒக்டோபரில் பணவீக்கம் 1.5 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஒக்டோபர் மாதத்தில் 1.5 சதவீதமாக சொற்ப அளவினால் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் ஒக்டோபரில் மாற்றமின்றி அதே மட்டத்தில் காணப்பட்டதுடன், செப்டெம்பரில் 4.7 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் ஒக்டோபரில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் ஒக்டோபரில் -0.22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில்…

Read More

ஆந்திர ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று (29) இரவு ஒரு பயணித்த பயணிகள் ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்திருந்த போது விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு பயணித்த மற்றொரு பயணிகள் ரயில் அதன் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 13…

Read More

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் பலி

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50-இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறும் வௌியில் செல்ல வேண்டாமெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read More

பங்களாதேஷில் இரு ரயில்கள் மோதி விபத்து 17 பேர் பலி, நூறு பேர் காயம் !

பங்களாதேஷில் இரு ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்துள்ளது. பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக பயணத்தடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்மாறிக் கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு…

Read More