சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் ஜே.வி.பியின் தொழிற்சங்கம் பங்குபற்றுகிறது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது. இதுகுறித்து தொழிலமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு கிடைத்துள்ளது. இதன்போது, தாம் 2000 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றமக்கள்…

