கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் நேற்று வெளியாகி இருந்தது.
அங்கு செம ஹிட்டடித்த படம் என்றாலும் தமிழில் சிலர் புதியதாக பார்க்கும் படம் தான். இப்படத்தில் சிம்பு இருப்பதாலேயே செம ஸ்பெஷல்.
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த பத்து தல திரைப்படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.

