பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது.
அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

