சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவில் வழங்கப்பட்ட 36 000 மெட்ரிக் தொன் உரத்தை சிறுபோகத்திற்காக ஐ.நா. உணவு , விவசாய ஸ்தாபனம் விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது.
ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களுக்கிடையிலான சிறுபோகத்திற்கும் , அதற்கு அடுத்து வரும் பயிர்செய்கைப் போகங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிக நெல் விவசாயிகளுக்கு இந்த உரம் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கு தேவையான அளவின் அடிப்படையில் உரம் வழங்கப்படும்.
விவசாயிகள் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இந்த உதவிகள் ஆதரவளிக்கும் என்றும் , இதனை வழங்கியமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

