ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று வெள்ளிக்கிழமை (09) காலை பேர்த் நகரில் சந்தித்தார்.
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், அதற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அதையடுத்து, காலநிலை மாற்றம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்துக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

