மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

