புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் ஹலாவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சிறுமி பாடசாலை முடிவடைந்து தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

