மஸ்கெலியா – நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் எமில்டன் பிரிவில் மூன்று மாணவர்கள் காணாமற்போயுள்ளனர்.
பாடசாலைக்கு செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து நேற்று புறப்பட்ட மாணவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லையென நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
13, 14, 15 வயதுடைய மாணவர்களே காணாமற்போயுள்ளனர்.
வீட்டின் அருகிலுள்ள நீர்க்குழாயொன்றை உடைத்ததாகவும், பெரியோரின் தண்டனைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகியிருக்கலாமெனவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து காணாமற்போன மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

