ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது காலிறுதி கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் Noor Ali Zadran அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Nuwan Thushara 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் தலைவர் Sahan Arachchige அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Gulbadin Naib, Qais Ahmad ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

