திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது.
ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

