மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியது

மொராக்கோவில் அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்-சாபி (Marrakesh-Safi) பிராந்தியத்தில் 6.8 மெக்னிட்யூட் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800-ஐ கடந்துள்ளது. 

 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 

மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன. 

இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 நாட்களைக் கடந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *