ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி , சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டு;ள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் முதலாம் பிரிவின் 2ஆம் உப பிரிவினால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் திகதியாக 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க , குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் முதலாம் பிரிவின் 2ஆம் உபப் பிரிவினால் அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய குறித்த சட்டமும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://documents.gov.lk/files/egz/2023/9/2348-46_T.pdf

