அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியல்தீர்வை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் சகல தரப்பினருடனும் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்கவையாகும்.
இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கிய எந்தவொரு நியாயமான செயன்முறையினதும் முக்கிய கூறாக பொறுப்புக்கூறலே காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாகத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அவ்வறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

