சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சுரானா குழுமத்துடன் , இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கு பொறுத்தமான இடங்களை அடையாளம் காணல் தொடர்பிலும் குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/kanchana_wij/status/1692812527338758327/photo/1

