அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையவெளி மற்றும் இணைய கொள்கைகளுக்கான தூதுவர் நதானியேல் சி.ஃபிக் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அவர் கொழும்பில் இணைய பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் தொடர்பான அரச மற்றும் தனியார் துறையினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அவர் தனது இலங்கை பயணத்திற்கு முன்னதாக, இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். பெங்களூருவில் நடைபெறும் ஜீ20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கு அமெரிக்க தூதுக்குழுவுக்கு அவர் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

