இலங்கை மீட்சிக்கான பாதையில் பயணிக்கும் நிலையில், சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கேந்திர நிலையமாக தனது பங்கை புதுப்பித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற இந்தோ-பசுபிக் சுற்றாடல் பாதுகாப்பு மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி, வன பாதுகாப்பு தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரப்பணிப்புடன் செயற்படுவதாக ஜூலி சங் தெரிவித்தார்.
உலகின் அனைத்து நாடுகளும் வெற்றியையும் ஸ்திரத்தன்மையையும் அடைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நிலவும் வறட்சி உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் காணப்படுவதாகவும் இத்தகைய பொது நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக கருத்து பரிமாற்றம், புத்தாக்க முறைமைகளை கண்டறிவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தினார்.

