பாக்கிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று இறுதி செய்யப்படும் என தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இறுதி தீர்மான்த்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் கோரிக்கைக்கு அமைய பாக்கிஸ்தான் ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
அதனையடுத்து தற்காலிக பிரதமர் பதவிக்காக 6 பேரின் பெயர்கள் தற்போது தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாக்கிஸ்தான் அரசியலமைப்பிற்கு அமைய இடைக்கால பிரதமரை தெரிவு செய்வதற்காக அந்த நாட்டு பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
எனினும் இடைக்கால பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை ஷேபாஸ் ஷெரீப் பிரதமராக செயற்படுவார்.

