சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று மின்கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது. வருடாந்தம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் , தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவ்வாறு இதனைப் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புக்கள் இன்றி ஆண்டுதோறும் தடையற்ற மின்சாரத்தை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கு இலங்கை மின்சாரசபை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

