மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட 15 மெகாவோட் காற்று மின்சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிலைய திறப்பினைக் கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஊடாக தங்கள் கடற்றொழில் நடவடிக்கைகள் பாரிளவில் பாதிக்கப்படும் என்பதோடு , அது தமது வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

