ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி நாளை வெள்ளிக்கிழமை (4) அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது , அமைச்சர் அலி சப்ரி அங்கு பல முக்கிய சந்திப்புக்களிலில் ஈடுபடவுள்ளார்.
அதற்கமைய இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ள அமைச்சர் அலி சப்ரி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தல் குறித்து இதன் போது கலந்துரையாடவுள்ளார்.
மேலும் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் அமைச்சர் அலி சப்ரி ஈடுபடவுள்ளார். ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

