முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு

மியன்மாரின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில்‌ இராணுவ ஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01) தெரிவித்துள்ளன.
அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14 வழக்குகளை அவர்‌ எதிர்கொள்வார்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
2021 ஆம்‌ ஆண்டு இராணுவப்‌ புரட்சியையடுத்து, ஆங்‌ சான்‌ சூகி உட்பட ஜனநாயக அரசியல்‌ தலைவர்கள்‌ பலரும்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஊழல்‌, சட்டவிரோதமாக தொடர்பாடல்‌ கருவிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப்‌ புறக்கணித்தமை முதலான குற்றச்சாட்டுக்களில்‌ அவருக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்‌, அவற்றில்‌ 5 வழக்குகளிலிருந்து அவருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *