இந்திய – பசிஃபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அது குறித்த விவரங்களையும் அந்நாடுகள் வெளியிட்டுள்ளன.
ஆக்கஸ் என அழைக்கப்படும் இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலியா முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பெறுகிறது. குறைந்தபட்சம் 3 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் உருவாக்கிய ரோல்ஸ்-ராய்ஸ் அணுஉலைகளை உள்ளடக்கிய அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

