கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற அந்நாட்டு விமான படையை சேர்ந்த கனடைர் சி.எல்.-215 என்ற நீர் தெளிக்கும் விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இதன் போது விபத்துக்கு உள்ளான குறித்த விமானத்திலிருந்த கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

