தபால் , முத்திரை கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்படுமா?இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார விளக்கம்

அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே தவிர , அதனை தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார , முத்திரை கட்டணங்களையோ அல்லது தபால் கட்டணங்களையோ அதிகரிக்க எதிர்பார்க்கவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக புதிய சட்ட மூலம் தயாரிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் , இவ்வாண்டுக்குள் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *