அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 968 000 ஆட்சேபனைகளும் இ 17 500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவற்றை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இவை மீளாய்வு செய்யப்பட்டு இ தகுதியுடைய அனைவரும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.
மேலும் இறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


