விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்!

சனத்தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


சனத்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அதற்கமைய 2023/2024ஆம் ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதற்கு முன்னர் கடந்த 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *