பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மனம்பிட்டிய கொடலீய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு , சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 12 பேரில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் இறுதி ஆண்டில் பயின்று வந்த 23 வயதுடைய சமித திஸாநாயக்க மற்றும் தமித் சாகர என்ற மாணவர்களே இந்த அவலத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் வார இறுதி விடுமுறையில் வீட்டுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் பல்கலைகழகத்துக்கு செல்வதற்காகவே குறித்த பஸ்சில் பயணித்துள்ளனர்.

