இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா நேற்று திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

